கோவை: சவுக்கு சங்கர் வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம் !

கோவை: சவுக்கு சங்கர் வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம் !
X
பெண் போலீசார் குறித்து அவதூறான தகவல்கள் பரப்பியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பெண் போலீசார் குறித்து அவதூறான தகவல்கள் பரப்பியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சைபர் கிரைம் போலீசார் முன்பு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விசாரணையை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.
Next Story