ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் பெண்களுக்கு வளையல் வழங்கினர்..

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி  அம்மன் கோவிலில் பெண்களுக்கு வளையல் வழங்கினர்..
X
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் பெண்களுக்கு வளையல் வழங்கினர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆடி மாதம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்கள் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை பெண்கள், பக்தர்கள் அனைவருக்கும் அம்மனின் வளையல்கள் வழங்க ஏற்பாடு செய்து பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மற்றும் கோவில் பூசாரிகள் வளையல்கள் வழங்கி சிறப்பித்தனர்.. காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வளையல்கள் வாங்கி சென்றனர்.
Next Story