திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மின்வாரிய ஊதியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவதை கைவிட வேண்டும்,ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பணியமர்த்த வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வேண்டும்,ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத்தின் தலைவர் அழகிரி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story