தஞ்சையில், வணிகர் நல வாரிய உறுப்பினர் கட்டணமில்லா சேர்க்கை சிறப்பு முகாம்

தஞ்சையில், வணிகர் நல வாரிய உறுப்பினர் கட்டணமில்லா சேர்க்கை சிறப்பு முகாம்
X
வணிகர் நல வாரியம்
வணிக பெருமக்களின் நலனுக்காக தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தமிழ்நாடு வணிகவரித் துறையில் கடந்த 1989 ஆம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டு சீரிய முறையில் இயங்கி வருகிறது.  இந்த தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஏராளமான வணிகர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் அடைந்துள்ளனர் . இதில்  உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு குடும்ப நலஉதவி, மருத்துவ உதவி, திருமண உதவித்தொகை, விபத்துக்கால உதவித்தொகை என 9 வகையான நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு வணிகவரித்துறை  (தஞ்சாவூர் மண்டலம், திருவாரூர் கோட்டம்), வணிகர் நல வாரியம், தஞ்சாவூர் வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இணைந்து தஞ்சாவூரில் வணிகர் நலவாரிய உறுப்பினர் கட்டணமில்லா சேர்க்கை சிறப்பு முகாமை நடத்தினர் . விழாவிற்கு தஞ்சாவூர் மண்டலம், திருவாரூர் கோட்டம் வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் தலைமையேற்று பேசினார்.  தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் லயன் முகமது ரஃபி வரவேற்றார். வணிகவரி அலுவலர் சரிதா, தஞ்சை வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த சிறப்பு முகாமில் பேரமைப்பை சேர்ந்த ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அல்வலர்களிடம்  வழங்கினர். பின்னர் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர்  சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாநகர செயலாளர் ஜெயக்குமார்,  இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வணிகவரி உதவி ஆணையர் கீதா நன்றி கூறினார்.
Next Story