பேராவூரணி அருகே தென்னையில் பண்ணைப்பள்ளி துவக்கம்

பேராவூரணி அருகே தென்னையில் பண்ணைப்பள்ளி துவக்கம்
X
வேளாண்மை
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி வட்டாரம், துறவிக்காடு கிராமத்தில், திருச்சியில் அமைந்துள்ள மத்திய பூச்சிநோய் மேலாண்மை மையம் மற்றும் பேராவூரணி தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னையில் பண்ணைப்பள்ளி முதல் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.  உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர் அமுதா,"பயிர்களில் ஏற்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.  தோட்டக்கலை உதவி இயக்குநர் வள்ளியம்மாள், துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.  பேராவூரணி, கிழக்கு கடற்கரை சாலை தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் முத்துவேல் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  நிறைவாக துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார். இப்பயிற்சியானது தொடர்ந்து 13 வாரங்கள் நடைபெறுகிறது. இதில், தென்னை விவசாயிகள் நாகராஜன், கோவிந்தசாமி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story