பேராவூரணியில் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா, பகுதி நேர அங்காடி திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சியில், பகுதி நேர அங்காடியை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார். நிகழ்ச்சிகளில், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, பொறியாளர் இளையராஜா, பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் திமுக மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஆசிரியர் ஆனந்தராஜ், பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, முடச்சிக்காடு சக்கரவர்த்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story



