தளி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள ராமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (22) தொழிலாளியான. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சிவக்குமார் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

