தவறவிட்ட தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டு

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் திரு. சுடலைகண்ணு அவர்கள் பணி நிமித்தமாக தென்காசி வந்துவிட்டு மீண்டும் வாசுதேவநல்லூர் செல்லும் வேலையில் தென்காசியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற போது அங்கு கீழே தங்க செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த தலைமைக் காவலர் செயின் உரிமையாளர் இங்கே வந்தால் எனது எண்ணில் தொடர்பு கொள்ள கூறுங்கள் என்று கடையின் உரிமையாளரிடம் கூறிவிட்டு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து செயினை தவறவிட்டவர்கள் வந்தவுடன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர் அவர்கள் முன்னிலையில் உரிமையாளரிடம் தங்க செயின் ஒப்படைக்கப்பட்டது. செயினை பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர் காவலருக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நேர்மையான முறையில் கீழே கிடந்த தங்க செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை பாராட்டும் விதமாக அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story

