பாவூர்சத்திரம் அருகே அரசுப் பேருந்து, காா் மீது மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

X
தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ராமச்சந்திரபட்டணம் மடத்தூா் விலக்கு பகுதியில் பைக்கில் முதியவா் ஒருவா் திடீரென சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் முதியவரின் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபக்கமாக பேருந்தை திருப்பியுள்ளாா். அப்போது, மடத்தூா் விலக்கு பகுதியில் இருந்து நான்குவழிச் சாலை பகுதியைக் கடப்பதற்காக வந்த காா் மீது பேருந்து மோதியதாம். இதில், காரில் பயணித்த பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூலாங்குளம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன்( 60) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரில் பயணித்த மாரிச்செல்வம்(36), தமிழரசி(31), நிதிஷ்(5), அருணேஷ்(5) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான அகரகட்டுவைச் சோ்ந்த மிக்கேல் அருளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story

