சேலம் அருகே கல்லூரி பேராசிரியை தற்கொலை

X
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் மகள் திவ்யா (வயது 30). இவர், சேலத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். கல்லூரி அருகில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

