உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீஸ் ஏட்டுகளுக்கு பாராட்டு

உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீஸ் ஏட்டுகளுக்கு பாராட்டு
X
விளையாட்டு அதிகாரி பாராட்டு
காவல் துறையினருக்கான உலக அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் அமெரிக்காவில் நடந்தது. இதில், சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் ஏட்டு சுரேஷ்குமார், மும்முறை தாண்டுதலில் தங்கமும், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இதேபோல் ஓமலூரில் பணிபுரியும் ஏட்டு தேவராஜ், கம்பு ஊன்றி தாண்டுதலில் தங்கமும், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் தடை ஓட்டம் ஆகியவற்றில் வெண்கலம் பதக்கம் வென்றார். உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற ஏட்டுக்கள் சுரேஷ்குமார், தேவராஜ் ஆகியோருக்கு நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம் வென்ற ஏட்டுக்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலாதேவி, நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story