மாயனூர் கதவனைக்கு நீர்வரத்து பாதியாக குறைந்தது.

மாயனூர் கதவனைக்கு நீர்வரத்து பாதியாக குறைந்தது.
மாயனூர் கதவனைக்கு நீர்வரத்து பாதியாக குறைந்தது. கர்நாடகா மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை கொள்ளளவு 120 அடியை எட்டி உபரி நீர் திறக்கும் அளவுக்கு மாறியது. நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணையில் திறக்கப்பட்ட உபரி நீர் ஏறக்குறைய ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர்.காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் மாயனூர் கதவணையிலும் நீர்வரத்து சரிந்தது. இன்று காலை ஆறு மணி நிலவரப்படி கதவனைக்கு நீர்வரத்து 63,966கன அடியாக குறைந்தது. இதில் காவிரி ஆற்றில் 62,496 கன அடி நீரும்,நான்கு பாசன வாய்க்கால்களில் 1470 திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாயனூர் சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியது.
Next Story