குருசடி விரிவாக்கம் செய்ய திடீர் எதிர்ப்பு

X
குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி குருசடி உள்ளது. இந்த குருசடியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் ரசல்ராஜ் என்பவர் குருசடி விரிவாக்கம் செய்தால் தனது வீடு மறைத்துவிடும் என்று கூறி நேற்று மாலை விரிவாக்க பணியை தடுத்து நிறு த்தினார். இதனால் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அந்த பகுதியில் கூடி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றம் மூலம் இதற்கு முடிவு தேடி கொள்ளுங்கள் என்று கூறி, அந்த பகுதியில் குவிந்தவர்களை கலைந்து போக கூறினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

