கொல்லங்கோட்டில் சாலை சீரமைப்பு துவக்கம்

X
குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள 70 சாலைகளை சீரமைக்க கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலைகள் உள்கட்டமைப்பு ஆகிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 6.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சாலை சீரமைப்பு பணிகள் நேற்று துவங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து சாலை பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ரூ. 4.90 கோடியில் நடந்து வரும் கொல்லங்கோடு நகராட்சி அலுவலக புதிய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் புனிதன் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்.
Next Story

