தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
X
அரச்சலூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்டுபுதுரை சேர்ந்தவர் மணி (34). கட்டிட தொழிலாளி. திருமணமாகவில்லை. மதுவுக்கு அடிமையான மணி தினமும் குடித்துவிட்டு வந்து அவரது தாய் அஞ்சலையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மது போதையில் வீட்டுக்கு வந்த மணி, தன் தாயிடம் சண்டை போட்டுள்ளார்.  பின்னர் அவரை வீட்டை விட்டு வெளியில் சென்று படுக்குமாறு கூறி, அவர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிளிட்டு விட்டு படுத்து கொண்டார்.நேற்று காலை 8 மணியாகியும் கதவு திறக்காததை கண்ட தாய் அஞ்சலையும், அக்கம் பக்கம் உள்ள உறவினர்களும் கதவை தட்டி பார்த்துள்ளனர்.  ஆனால் கதவு திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் உள்ள மர சட்டத்தில் மணி தூக்கிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story