பாரம்பரிய விதைத்திருவிழா கருத்தரங்கம்

பாலக்கோட்டில் பாரம்பரிய விதைத்திருவிழா கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வாசவி மகாலில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய விதைத்திருவிழா மற்றும் சிறுதானிய உணவு மீட்டெடுத்தல் கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சிறுதானியங்களான வரகு, சாமை,திணை,கேழ்வரகு, குதிரைவாலி,பனிவரகு, சிறு தானிய கிடங்குகள் அமைத்து பாரம்பரிய விவசாய பொருட்களை சேமித்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
Next Story