ஆமணக்கந்தோண்டி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ. ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள் .

ஆமணக்கந்தோண்டி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ. ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள் .
X
ஆமணக்கந்தோண்டி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர நியாய விலை கடையை ஆமணக்கந்தோண்டியில் திறந்து வைத்து கோரிக்கையை நிறைவேற்றி தந்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ வை ஆரத்தி எடுத்து கிராம மக்கள் வரவேற்றனர்.
அரியலூர், ஜூலை.31- அரியலூர் மாவட்டம் ஆமணக்கந்தோண்டி பகுதியில் ரேஷன் கடை இல்லாமல் புது சாவடிக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரும் சூழல் இருந்ததால் விவசாய குடும்பத்தினர் விவசாய வேலைகளை விட்டு விட்டு 2 கி.மீ தூரமாக சென்று பொருட்கள் வாங்கும் சூழல் இருந்தது. இதனால் தூர விரயம் நேர விரையும் அதிகமானதாலும், விவசாய வேலைகளை சரிவர பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டதாலும் ஆமணக்கந்தோண்டி கிராம மக்கள் இது குறித்து ஜெயங்கொண்டம் எம் எல் ஏ - விடம்  நியாய விலை கடை கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து இன்று கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஆமணக்கந்தோண்டி இடைகட்டு கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட புதிய பகுதிநேர நியாய விலை கடையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். புதிய பகுதிநேர நியாய விலை கடை  தமது ஊருக்கு வந்து விட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நிகழ்ச்சியில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் மணிமாறன், துணைப் பதிவாளர் சாய்நந்தினி, கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் செயலாளாட்சியர் சுரேஷ் , மற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணனை ஆரத்தி எடுத்து பகுதி மக்கள் வரவேற்றனர்.
Next Story