நர்சிங் மாணவி மாயம். தாயார் புகார்

X
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கட்டாகுளம் தம்மச்சியம்மன்பட்டி ஊரணிக்கரை தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் கீர்த்தனா( 19) என்பவர் வாடிப்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் கடந்த 22ஆம் தேதி வேலைக்கு வெளியே சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் போது வீட்டில் மகள் கீர்த்தனா இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார், கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஜூலை .30) மதியம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story

