"உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்ட எம்எல்ஏ
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் 43 மற்றும் 44 ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று (ஜூலை.31 )நடைபெற்றது.. இம் முகாமினை பூமிநாதன் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாநகராட்சி ஆணையாளர், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட பார்வையிட்டு பொது மக்களின் கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.. இம்முகாமில் 15_க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.. இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள் திரு.முகேஷ் சர்மா, திருமதி.தமிழ்ச்செல்வி மாயழகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Next Story




