ஜல்லிக்கற்கள் இறக்க வந்த லாரி கவிழ்ந்து விபத்து
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் தனியார் குடோனுக்கு ஜல்லி ஏற்றி வந்துள்ளனர் ஜல்லியை குடோனில் கொட்டுவதற்காக இன்று ( ஜூலை.31)லாரி பின்னோக்கி சென்றபோது குடோனின் நுழைவுவாயிலில் கழிவுநீர் செல்வதற்காக போடப்பட்டுள்ள காங்கீரிட் ஸ்லாப் உடைந்து லாரியின் பின் சக்கரம் கழிவுநீர் கால்வாயின் உள்ளே இறங்கி எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர்கள் எதிர்பாராத விதமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story




