கோவை ஆட்சியர் அலுவலக ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் !

கோவை ஆட்சியர் அலுவலக ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் !
X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் நேற்று பரபரப்பு நிலவியது. 1989-ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்காக கணபதி பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், அவரது வாரிசுகள் வழக்கு தொடர்ந்தனர். கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இன்று நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்புடன் வந்ததால் அலுவலகத்தில் பதட்டம் நிலவியது. துறை அதிகாரிகளுடன் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசு தரப்பில் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Next Story