திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் மீண்டும் நிறுவப்பட்டது !
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் சேதமடைந்த 4 அடி உயர திருவள்ளுவர் சிலை இன்று புதுப்பொலிவுடன் மீண்டும் நிறுவப்பட்டது. விபத்திற்குப் பிறகு தற்காலிகமாக அகற்றப்பட்ட சிலை சிற்பக் கலைஞர்களால் புணரமைக்கப்பட்டு, நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பு முறையில் நிறுவப்பட்டது. சிலை அமைந்த பகுதி சுத்தம் செய்து அழகுபடுத்தப்பட்டதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
Next Story



