ஏ.மாத்தூரில் குடிநீர் வேண்டி மக்கள் சாலை மறியல்!
புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியில் குடிநீர் குழாய்களில் குடிநீர் வராததால் குடிநீர் கேட்டு இன்று (ஜூலை 31) பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து, மாத்தூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Next Story






