சூளகிரி அரகே ஜல்லி கடத்திய லாரி டிரைவர் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அடுத்துள்ள பேரிகை அடுத்த ராமச்சந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே புக்கசாகரம் கிராம நிர்வாக அலுவலர் வெண்மதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனையிட்ட போது உரிய அனுமதி இல்லாமல் இரண்டு யூனிட் ஜல்லி கற்களை கொண்டு சென்றது தெரிய வந்தது இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரி விசாரணை நடத்தி பேரிகை அருகே உள்ள பிக்கிலி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவராஜ் மீது வழக்குப்பதிந்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

