ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
X
மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள படப்பிடிப்பு தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் பிரபு( 40) என்பவர் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார் . இவருக்கு மனைவி மகாலட்சுமி மூன்று குழந்தைகள் உள்ளன இந்நிலையில் மனைவி மகாலட்சுமி அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி உள்ளார் .இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இதை தொடர்ந்து தனது குழந்தையுடன் மனைவி மகாலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை அழைத்து வரச் சென்ற போதும் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் மணமுடைந்த பிரபு வீட்டில் நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story