திருவோணம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 

திருவோணம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 
X
முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவோணம் ஒன்றியம், நெய்வேலி வடக்கு, நெய்வேலி தெற்கு, சென்னியவிடுதி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நெய்வேலி வடக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், முதல்வரின் முகவரித்துறை சார்பில், "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலரும், துணை ஆட்சியருமான சாந்தி, திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசண்முகம், நெய்வேலி வடபாதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பாண்டியன், வாட்டாத்திக்கோட்டை ஆர்.பன்னீர் செல்வம், திமுக நிர்வாகிகள் கார்த்திக் வெங்கடேஷ், ஜெயபால், ரெங்கசாமி, ராஜேந்திரன், அண்ணாதுரை, சீனிவாசன், பொன்னுசாமி, ஜானகிராமன், உடையப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  மனைப்பட்டா, பட்டா மாற்றம், மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, காப்பீட்டு அட்டை, நலவாரியம், கடன் உதவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மனுக்களை துறை வாரியான அலுவலர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்.  முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். நிறைவாக, வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் நன்றி கூறினார். இதில், திருவோணம் மருத்துவ அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
Next Story