காவல் நிலையம் முற்றுகை

X
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டையை சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தினர் நூதன மோசடியில் ஈடுபட்டதை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் கூட்டமாக காவல் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமிடம் தனியார் நிதி நிறுவனத்தினர் வைத்தியலிங்கத்தை மிரட்டுவதாகவும் அவர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதால் அவரது வீட்டு பத்திரத்தை பெற்று தரும்படி புகார் அளித்தனர்.
Next Story

