ஆசிரியை தலை நசுங்கி பலி

X
ஈரோடு அடுத்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர்.இவரது மகள் மிர்த்தியங்கா (21).இவர் மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மிர்த்தியங்கா தினமும் காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். பின்னர் மாலை பள்ளி முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வருவார்.இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மிர்த்தியங்கா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்க் பகுதி அருகே வந்த போது மிர்த்தியங்கா சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் பஸ் கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மிர்த்தியங்கா இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய ஆசிரியை மிர்த்தியங்கா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அந்த தனியார் பஸ்சின் பின் பக்க சக்கரம் ஆசிரியை மிர்த்தியங்கா தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

