திருச்சி: வங்கி காசாளர் வீட்டில் தங்கம் வெள்ளி பொருட்கள் திருட்டு.

X
திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் தாமரைசெல்வி ( 42). இவர் ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை தாமரைசெல்வி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 14 பவுன் தங்க சங்கிலி, தலா 100 கிராம் வெள்ளி குங்குமசிமிழ், டம்ளர் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

