சாலையைக் கடக்க முயன்றவர் மீது டூவீலர் மோதியதில் வலி.

X
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சிவரக்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்த நாராயண சுவாமியின் மகன் ராமகிருஷ்ணன்(43) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை.30) இரவு 9 ஒன்பது மணி அளவில் திருமங்கலம் விருதுநகர் ரோடு சிவராஜ் கோட்டை சந்திப்பு அருகே சாலையை கடக்க முயற்சித்த போது மதுரை கள்ளிக்குடி வி.டி மெயின் நகர் தாமரை தெருவில் வசிக்கும் பாண்டியின் மகன் நாகராஜன் என்பவர் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று( ஜூலை.31)காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி செல்வி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

