சாலையில் குறுக்கே வந்த நாய். பள்ளி மாணவன் பலி.

சாலையில் குறுக்கே வந்த நாய்.  பள்ளி மாணவன்  பலி.
X
மதுரை அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததில் மிதிவண்டியில் சென்ற பள்ளி மாணவன் பலியானார்
மதுரை மாவட்டம் விராதனூர் குசவபட்டி மேல தெருவை சேர்ந்த கார்த்திக் (12) என்பவர் கீழவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார் . இவர் கடந்த 19ஆம் தேதி மாலை 4 மணி அளவில் குசவபட்டி பகுதியில் மிதிவண்டியை ஓட்டி சென்று கொண்டிருந்த பொழுது நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை .31) காலை உயிரிழந்தார். இது குறித்து தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story