விஷம் அருந்தி ஹோட்டல் ரூம் பாய் தற்கொலை.

விஷம் அருந்தி ஹோட்டல் ரூம் பாய் தற்கொலை.
X
மதுரை திருமங்கலம் ரயில்வே கேட் அருகே விஷம் அருந்தி ஹோட்டல் ரூம் பாய் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்லூர் தெற்கு தெருவில் வசிக்கும் ராதாகிருஷ்ணனின் மகன் ராஜ்குமார்( 26 ) என்பவர் விரகனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ரூம் பாயாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஜூலை.30) திருமங்கலம் கூலையாபுரம் ரயில்வே கேட்டு அருகே விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை .31) மதியம் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story