கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்

மதுரை திருமங்கலம் அருகே விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழங்கினார்.
மதுரை திருமங்கலம் அருகே கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூலை.31) இரவு தெற்கு மாவட்ட திமுக சார்பாக தே.கல்லுப்பட்டி தெற்கு ஒன்றியம் எஸ்.மேலப்பட்டி கிராமத்தில் திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து பேசிய மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ‎‎ரூ. 14, லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக 1200 குடும்ப தாரர்களுக்கும் மற்றும் இளைஞர்களின் 15-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பேக், தேசிய அளவில் விளையாடிய மூன்று வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் மற்றும் பரிசுத்தொகை என நலத்திட்ட உதவிகளும் மேலும் 2500 நபர்களுக்கு அசைவ உணவு வழங்கினார். ‎ ‎இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், தே.கல்லுப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ‎
Next Story