காங்கேயம் அருகே பெருமாள்மலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம். வருவாய் துறை அதிரடி நடவடிக்கை

X
காங்கேயம் சிவன்மலை அடுத்துள்ள பெருமாள்மலை பகுதியில் சிலர், நெடுஞ்சாலையோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் முன்னனுமதி இன்றி விநாயகர் கோவில் கட்ட வேலைசெய்தனர். இதையடுத்து அங்கு சிலை வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறையில் மனு அளித்தனர். இதையடுத்து சம்பத்தப்பட்ட இடத்தை வருவாய்துறையினரால் அளவீடு செய்யப்பட்டு, அது மலைகுன்று பகுதி என வகைப்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து காங்கேயம் வருவாய் துறையினரால் அனுமதி இல்லாமல் இங்கு எந்த பணியும் செய்யக்கூடாது என தெரிவித்து இருந்தனர். கடந்த 18ம் தேதி இரு தரப்பினருடனும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவு எட்டப்படாத நிலையில் ஒரு தரப்பினர் ரெடிமேட் கட்டடம் கட்டி, அதில் விநாயகர் சிலையை அமைத்து வருவாய் துறையிறருக்கு சொந்தமான இடம் ரீ.சா.எண் 787ல் வைத்தனர். இதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் அவ்விடத்தில் கோவில் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருதரப்பினரில் ஒப்புதலுடன் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகள் கிரேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து மாற்று இடத்தில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story

