புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் மக்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது.

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் மக்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது.
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் மக்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பூஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள தனியார் கூட்டங்கள் மக்கள் உடன் ஸ்டாலின் திட்டம் இன்று நடைபெற்றது. பேரூராட்சி பகுதியில் வசிக்கக் கூடிய பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை இந்த முகாமில் அளித்தனர். இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திடீரென வந்து ஆய்வு செய்தார். அப்போது அரசுத்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்களா மனுக்களை முறையாக பெற்று நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பெறப்பட்ட மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story