கரூர்-துறை ரீதியான நடவடிக்கை- செல்போன் டவரில் ஏறி அச்சுறுத்தல்.
கரூர்-துறை ரீதியான நடவடிக்கை- செல்போன் டவரில் ஏறி அச்சுறுத்தல். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமான கும்பகோணம் கோட்டத்தில் போக்குவரத்து தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பழனிச்சாமி இன்று பேருந்து டிப்போவுக்குள் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் ஏறி அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் சமாதானம் பேசி கீழே இறங்க வைத்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக கீழே வந்த பழனிச்சாமியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கும்பகோணம் பேருந்து கோட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.
Next Story






