மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து மேற்கொள்ளும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பார்வையிட்டார்! பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டம்! ஆலத்தூர் வட்டம்! நாரணமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பார்வையிட்டார்! பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்! பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 15.07.2025 அன்று முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (01.08.2025) ஊரகப் பகுதிகளுக்கான முகாம் நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது அவர் தனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்று மருத்துவத்துறையினரிடம் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர், மனுக்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழங்கிடவும், அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு துறைகளின் சேவைகள் தொடர்பாக முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஊரக பகுதிகளில் 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 சேவைகளையும், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகள் பங்கேற்று 43 சேவைகளையும் நேரடியாக வழங்கி வருகிறது, மேலும் இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கப்படும் அனைத்து மனுக்களும் இணைய வழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு , பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினரிடம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் கேட்டனர். விரைவில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் பிறகு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் நாரணமங்கலம் முதல் விஜயகோபாலபுரம் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆதிதிராவிடர் காலணி மேற்கு பகுதியில் 30 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்காமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிரமப்பட்டு வருவதாகவும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி பட்டா கிடைக்க உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார். இதில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், வட்டாட்சியர் முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story