ஹோட்டலில் சாப்பிட சென்றபோது பிரியாணியில் பல்லியை போட்ட இரண்டு பேர் கைது !

ஹோட்டலில் சாப்பிட சென்றபோது பிரியாணியில் பல்லியை போட்ட இரண்டு பேர் கைது !
X
கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட சென்ற போது பிரியாணியில் பல்லியை போட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட சென்ற போது பிரியாணியில் பல்லியை போட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கடந்த மாதம் ஐந்து பேர் சென்று அவர்கள் அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்காக பிரியாணி வாங்கினர். அப்பொழுது அவர்களுக்கு கடை ஊழியர் குழம்பு ஊற்றிய போது, அதில் பல்லி கிடந்ததாக புகார் தெரிவித்தனர். இதை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தங்கள் கடைக்கு வந்த நபர்கள் பிரியாணியில் வேண்டுமென்றே பல்லியை போட்டு பொய்யான புகார் தெரிவித்ததாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியாணி கடை நடத்தி வருபவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் சந்தித்து புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆர்.எஸ் புரம் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓட்டலுக்கு சாப்பிட வந்த நடராஜ் உட்பட ஐந்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அங்கு சாப்பிட வந்த நபர்கள் பல்லியை கொண்டு வந்து பிரியாணியில் போட்டு பிரச்சனை செய்ததுடன், பொய்யான புகாரை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை, கோவை ரத்தினபுரியை சேர்ந்த சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து இந்த வழக்கில் நடராஜன் முன் ஜாமின் வாங்கி விட்டார். எனவே மீதமுள்ள இரண்டு பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story