கோவை ரயில் நிலையத்தில் கைதி தப்பி ஓட்டம் – தீவிர வலைவீச்சு!

X
மேற்கு வங்க போலீசார் மோசடிக்கேஸ் தொடர்பாக கைது செய்த ஆனந்தன் என்பவர், திருவனந்தபுரத்திலிருந்து சாலிமர் செல்லும் ரயிலில் அழைத்து செல்லப்பட்டபோது, கோவை ரயில் நிலையத்தில் தப்பி ஓடியார். போலீசில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்ததும் மற்றவர் கழிவறைக்கு சென்றதும் வாய்ப்பாக கையாண்ட அவர், பயணிகளுடன் அமைதியாக இறங்கி தப்பினார். இதை அடுத்து ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான ஆலநல்லூரிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
Next Story

