ஆடி வெள்ளி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

ஆடி வெள்ளி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
X
குமாரபாளையம் ஆடி வெள்ளியையொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆடி மாதத்தையொட்டி அம்மன் கோவில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது.  குமாரபாளையம்  திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை  மகேஸ்வரர் கோவிலில்,    சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. இதே போல்  சேலம் சாலை, ராஜா வீதி  சவுண்டம்மன் கோவில்கள்,  தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள்,    அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில்,    அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில், கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன்   கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில்  உள்ளிட்ட  கோவில்களில் சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.  பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story