இளந்தளிர் திட்டத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

X
திண்டுக்கல் சென்னம்ம நாயக்கன்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு சார்பில் இளம் தளிர் திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட கண்காணிப்பாளர் அணிஸ் சேகர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான சத்தான உணவுகள் குறித்தும் நோய் வராமல் தடுப்பது குறித்தும். உடல் நலம் தான் மனநலத்தை காக்கும். அப்பொழுதுதான் மன உறுதியும் ஏற்படும் அதை மாணவர்கள் புரிந்து கொண்டு உணவு வகைகளில் சத்தான உணவுகளை மட்டும் அருந்த வேண்டும். மேலும் சுகாதாரமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என பேசினார்கள். 13 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்தசோகை சோதனை செய்யப்பட்டது. மேலும் ரத்த சோகை மாத்திரைகளும் வழங்கப்பட்டன. ரத்த சோகை விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட தாய் சேய் நல அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அமுத கலா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
Next Story

