கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு தமிழ் சுடர் விருது

கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு தமிழ் சுடர் விருது
X
தமிழில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழ் சிந்தனைப் பேரவை தமிழ்ச் சுடர் விருது வழங்கும் விழா
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை மாதம் முழுவதும் கல்வி வளர்ச்சி மாதமாக தமிழ் சிந்தனைப் பேரவை கொண்டாடும் விதமாக அரசுப் பொதுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச்சுடர் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஏவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2025 ஆம் ஆண்டு அரசுப் பொதுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச் சுடர் விருதுகளை தமிழில் பேசுவோம் தங்கிலிஷ் தவிர்ப்போம் என்று சிறப்புரையாற்றி தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் தமிழறிஞர் ரமேஷ் குமார் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமதி ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் பூபதி, ஆறுமுகம், ராஜு, விருதாளர்கள் அபிராமி, சந்தோஷ், கோகுல பிரியா, சத்யஸ்ரீ, மித்ரா, பிரியதர்ஷிகா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் ஆசிரியர் நவீன் நன்றி கூறினார்.
Next Story