வழக்கறிஞர்கள் சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்

வழக்கறிஞர்கள் சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்
X
திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.. இதனை திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட நீதிபதி முத்து சாரதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் இலவச கண் பரிசோதனை , இலவச செவித்திறன் பரிசோதனை , சக்கரை வியாதிகளுக்கான மருத்துவ பரிசோதனை இருதய மற்றும் பாதுகாப்பு பரிசோதனை நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்கள் காதுகள் இருதயம், சர்க்கரை ஆகிய பரிசோதனைகளை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர். இதில் திண்டுக்கல்லில் உள்ள தலைசிறந்த இருதய நல மருத்துவர்கள் ,காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் ,விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் , மகப்பேறு மருத்துவர்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவர்கள் கண் மருத்துவர்கள் , செவிலியர்கள் என பல பங்கேற்று இலவசமாக அனைவருக்கும் பரிசோதனை செய்தனர்.
Next Story