திருநங்கைக்கு அரிவாள் வெட்டு

திருநங்கைக்கு அரிவாள் வெட்டு
X
நத்தம் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு,உடன் பிறந்த தம்பியே வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு, சம்பந்தப்பட்டவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வாங்க வேண்டும் என திருநங்கை கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திநகர் பகுதியில் வசிப்பவர்கள் ஆறுமுகம்-கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் என்ற சமந்தா , அமர் என்ற அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் என்ற சமந்தா கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட உடல் மாற்றம் காரணமாக திருநங்கையாக மாறிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த 12 வருடங்களாக தென்காசி பகுதியில் திருநங்கைகளோடு வசித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் அமர்நாத் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமந்தாவின் வீடியோவை பார்த்துவிட்டு அமர்நாத்திடம் இது பற்றி கேட்டுள்ளனர். உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமர்நாத் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது‌. இந்த நிலையில் சமந்தா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நத்தம் பகுதியில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் தந்தையுடன் சேர்த்து வைப்பதாக கூறி நண்பர்களுடன் அழைத்துச் சென்ற அமர்நாத் நத்தம் பகுதியில் இருந்த ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றபோது திடீரென சமந்தாவை அறிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சமந்தா மயங்கி கீழே விழுந்துள்ளார் உடனே அமர்நாத் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சமந்தாவை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
Next Story