ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிவன் பார்வதி அலங்கார உற்சவம்..

ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிவன் பார்வதி அலங்கார உற்சவம்..
X
ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிவன் பார்வதி அலங்கார உற்சவம்: ஏராளமானோர் நிண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். அதன்படி இன்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர்,மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம்,இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் முதலாம் ஆண்டாக சிவன் பார்வதி ருத்ராட்சை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனின் சிறப்பு அலங்காரத்தை காண ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாமல் நாமக்கல், சேலம் , ஈரோடு கரூர் ஆத்தூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் காலை முதலே நிண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தை ஏற்பாட்டினை கோவில் பூசாரிகள் சு. பாலீஸ்வரன், மா. விஜி,த.மணி, மு.சண்முகம், சு.கணேசன், சு.கடல்கரை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்..
Next Story