குளச்சலில் மீனவர்கள் போராட்டம்

X
கேரளா மாநிலத்தை சார்ந்த இரண்டு அருட் சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகியோர்கள் ஜூலை மாதம் 25ஆம் தேதி சட்டீஸ்கர் மாநிலம் நாராயண புரத்தைச் சார்ந்த மூன்று பெண்களுக்கு ஆக்ராவில் வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பதற்காக துர்க் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பஜ்ரங்கத்தால் என்ற அமைப்பை சார்ந்தவர்களால் அவர்கள் தாக்கப்பட்டு துர்க்ரயில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு அருட் சகோதரிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அருள் சகோதரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடல் மக்களின் கண்டனக் குரல் போராட்டம் குளச்சல் கடல் பகுதியில் இன்றுநடத்தப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமை வகித்தார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் - தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன், துணை தலைவர் கமலன், செயலர் ஆரோக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

