சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில்

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில்
X
சர்வதேச மனித உரிமை மாநாடு
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் நீதிமுறை சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் சர்வதேச மனித உரிமை மாநாடு நடந்தது. கல்லூரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கீதா வரவேற்றார். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியுமான மணிக்குமார், டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பாஸ்கரன், அறிவுசார் கருத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் கே.என்.பாட்ஷா, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவின் இயக்குனர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் நார்த்தாம்டன்சயர் காவல் பிரிவின் தலைவர் மணிகண்டன் சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த சர்வதேச மாநாடு மூன்று தனித்தனி ஆய்வு கருத்துக்களை கொண்டு மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் சாந்தகுமாரியின் முதல் அமர்வில் மனித உரிமைகள் பற்றிய காவல்துறை செயல்பாடுகளும் மற்றும் நீதித்துறை அமைப்பும் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில், உதவி பேராசிரியர் கோவிந்தன் நன்றி கூறினார்.
Next Story