ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் சார்பில் நலத்திட்ட உதவி‌..

ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் சார்பில் நலத்திட்ட உதவி‌..
X
ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் சார்பில் நலத்திட்ட உதவி‌..
ஜேசிஐ இந்தியாவின் தலைவர் JFS அங்கூர் ஜூன் ஜுன் வாலா அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே சி ஐ அமைப்புகளை பார்வையிட வந்திருந்தார். அவரின் வருகையை முன்னிட்டு ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் சார்பாக ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் ஒரு முதியோர் இல்லத்திற்கு அரிசி வழங்கப்பட்டது. குடிநீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் பிஸ்னஸ் சைன் போர்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜேசிஐ இராசிபுரம் மெட்ரோவின் தலைவர் JFM மணிமேகலை தமிழரசன், மண்டல தலைவர் JFS மணிகண்டன், மண்டல இயக்குனர் JCI Sen மணிவண்ணன் , ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் HGF சதீஷ்குமார், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பிரபு ராஜா, ஆடிட்டர் சதீஷ், சிவக்குமார், உமா வைத்தீஸ்வரன், ரஞ்சிதம், ஐஸ்வர்யா, மணிகண்டன், சரத்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே சி ஐ தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story