தேன்கனிகோட்டை:காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள இருதுக்கோட்டையை சேர்ந்த சந்திரப்பா மகள் உஷா (24). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்க ளுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த உஷா, அங்கேயே உள்ளார். இதன் இடையே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற் கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

