பச்சை அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
தருமபுரி மாவட்டம் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவிலில் 9ம் வருடாபிஷேக முன்னிட்டு காலை 7 மணி அளவில் தீந்தமிழ் வேள்வி பூஜை நடைபெற்றது நேற்று மாலை கொளத்தூர் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலூரில் இருந்து பால்குடம் ஊர்வலம் கரகம் எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் அம்மன் வேடமிட்டு சிவன் வேடமிட்டு ஊர்வலத்தில் நடனமாடியும் ஏராளமான பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்துக்கொண்டு கொளத்தூர் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் வரை ஊர்வலமாக வந்தடைந்தது தொடர்ந்து ஸ்ரீ பச்சையம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்த சிறப்பு பூஜை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் இந்த குலதெய்வம் குடும்பத்தார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொளத்தூர் .பழைய தருமபுரி. கடைவீதி. குமாரசாமி பேட்டை. கடகத்தூர். மாட்லாம்பட்டி அன்னசாகரம் குப்பூர் நாயக்கன்பட்டி. ராஜா தோப்பு. மணியம்பாடி .கடத்தூர். சங்கம். திருவண்ணாமலை .ஓசூர். கிருஷ்ணகிரி. சிங்காரப்பேட்டை. கம்பைநல்லூர். சென்னை .பெங்களூர். சேலம் திருப்பத்தூர் திருச்செங்கோடு தாராபுரம். மேட்டூர். பெரும்பாலை. பாப்பாரப்பட்டி. உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து காதுகுத்தி தங்கள் வழிபாடுகளை நிறைவேற்றினர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






